Transcript
Use with ChatGPT / Claude Auto-scroll A
கொடைக்கானலின் அழகை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து, ஆங்கிலேயர் காலத்தில் கட்டடங்கள் மலைக்கு எப்படி கொண்டு செல்லப்பட்டன என்ற கேள்வியை எழுப்புகிறது.
கொடைக்கானl மலைகளின் இளவரசி இன்று நாம் அங்கு போனால் அழகான ஏரி, படகு சவாரி, குளுகளு வானிலை, ஆங்கிலேயர் காலத்து பங்கலாக்கள் என ஒரு சொர்க்கத்தை பார்க்கிறோம்.ஆனால் ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்.200 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சாலைகளே இல்லை, வாகனங்களே இல்லை.அப்படி என்றால் இன்று நீங்கள் பார்க்கும் அந்த பிரம்மாண்ட பங்கலாக்களின் செங்கற்கள், சாய்வு நாற்காலிகள், ஏன் வானிலை ஆய்வகத்தின் பல டன் எடையுள்ள அறிவியல் கருவிகள் கூட எப்படி அந்த 7000 அடி மலை உச்சிக்கு போயிருக்கும்?ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தார்கள் என்று வரலாற்று புத்தகங்கள் சொல்கின்றன.ஆனால் அந்த நகரத்தை தங்கள் தலையில் சுமந்து உருவாக்கியவர்களின் பெயர்கள் எங்கே?வாருங்கள் கொடைக்கானl ஏரியின் மறுபக்கத்தில் மறைக்கப்பட்டிருக்கும் ஒரு ரகசிய வரலாற்றைத் தேடிப் போவோம்.
1821-ல் வார்டின் வருகை, குன்னுவர்-பழியர் மக்களின் புத்திசாலித்தனம், 1834-ல் மிஷனரிகள் காலராவிலிருந்து தப்பி மலைக்கு வந்தது குறித்து விளக்குகிறது.
1821 ஆம் ஆண்டு வார்டு என்ற ஆங்கிலேய நில அளவை அதிகாரி பழனி மலை பகுதிக்கு வருகிறார்.நான் ஒரு புதிய இடத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்று அவர் நினைத்திருந்தால் அங்கே அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.அங்கே ஏற்கனவே சுமார் 4000 மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள்தான் குன்னுவர்கள் மற்றும் பழியர்கள்.கற்களால் ஆன சாலைகள், படிக்கட்டு விவசாயம், பூம்பாறையில் ஒரு பழமையான முருகன் கோயில் என அங்கே ஒரு தனி உலகமே இயங்கிக் கொண்டிருந்தது.இந்த மலைவாழ் மக்கள் எவ்வளவு புத்திசாலிகள் தெரியுமா?பின்னாளில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இதை விதைத்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று உயர்தர கோதுமை விதைகளைக் கொடுத்தார்.மக்கள் அதை வாங்கினார்கள், விதைத்தார்கள்.ஆனால் ஒரு விதை கூட முளைக்கவில்லை.ஏன் தெரியுமா?விதைப்பதற்கு முன்பே அந்த விதைகளை அவர்கள் நசுக்கி விட்டார்கள்.விளைச்சல் அதிகமானால் வெள்ளைக்காரன் வரியை ஏற்றிவிடுவான்.நாங்கள் ஏன் எங்களுக்கே சூனியம் வைத்துக் கொள்ள இதுதான் அவர்களின் கணக்காய் இருந்தது.சரி.அப்புறம் எப்படி வெள்ளைக்காரர்கள் இங்கே வந்தார்கள்?சுற்றுலாவுக்காக அல்ல.உயிர் பிழைப்பதற்காக.1834 இல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்திலிருந்து சில கிறிஸ்தவ மிஷனரிகள் மதுரைக்கு வந்தார்கள்.ஆனால் மதுரையின் கொழுத்தும் வெயிலும் 1844 இல் பரவிய கொடூர காலரா நோயும் அவர்களை புரட்டி போட்டது.ஒரே நாளில் 60 பேர் வரை இறந்தார்கள்.மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான ஒரு இடத்தை தேடி அவர்கள் மலை ஏறினார்கள்.
1845 இல் பழனி மலை உச்சியில் இரண்டு சிறிய வீடுகளை கட்டினார்கள்.அப்படி பயந்து ஓடி வந்தவர்களின் புகலிடமாக உருவானதுதான் இன்றைய கொடைக்கானல்.
பியானோக்கள், அறிவியல் கருவிகள் எல்லாம் தலையில் சுமந்து இரவில் பாடிக்கொண்டே மலை ஏறிய தொழிலாளர்களின் சாகசமும், 1899 வானிலை ஆய்வக கருவிகள் கொண்டு சென்ற சாதனையும்.
வெள்ளைக்காரர்கள் மலை உச்சிக்கு போய் விட்டார்கள்.ஆனால் அவர்களின் பியானோக்கள், பீங்கான் தட்டுகள், கட்டுமான பொருட்கள் எல்லாம் பெரியகுளம் அடிவாரத்தில் கிடந்தன.இதை யார் மேலே கொண்டு போவது?இங்குதான் கதையின் உண்மையான நாயகர்கள் வருகிறார்கள்.பெரியகுளத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள்.இவர்கள் பகலில் மலை ஏற மாட்டார்கள்.இரவு 11:00 மணிக்குத்தான் பயணமே தொடங்கும்.ஏனென்றால் பகல் வெயிலில் 23 கிலோ எடையை தலையில் சுமந்து கொண்டு 6000 அடி ஏறுவது சாத்தியமே இல்லை.நிலவொளியில் வெறும் மூன்று அடி அகலமுள்ள பாறை பாதையில் ஒரு பக்கம் மலை, மறுபக்கம் அதல பாதாளம்.கையில் எந்த ஆயுதமும் இல்லை.ஆனால் அந்த காட்டில் புலிகளும் கரடிகளும் நடமாடும்.புலிகளை விரட்ட அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம் அவர்களின் குரல்.இருட்டை கிழித்துக்கொண்டு அவர்கள் ஒரே தாளத்தில் பாடிக்கொண்டே நடப்பார்கள்.
ஹங்கோங் ஹங்கோங்
ஓஹோ சந்தோஷம்
ஓஹோ சந்தோஷம்
ஹங்கோங் ஹங்கோங் ஓஹோ சந்தோஷம் ஒரு 14 வயது சிறுமி முதல் 60 வயது முதியவர் வரை தலையில் பெட்டிகளோடு விடியர் காலை குளிரில் மலை உச்சியை அடைவார்கள்.இன்று நாம் பார்க்கும் கொடைக்கானல் ஏரி உருவாவதற்கு முன்பு காட்டெருமைகள் புரண்டு கொண்டிருந்த அந்த சதுப்பு நிலத்தில் அவர்கள் தங்கள் சுமைகளை இறக்கி வைப்பார்கள்.
அறிவியல் உலகையே வியக்க வைத்த சுமைகள்.1899 ஆம் ஆண்டு சூரியனை ஆராய்வதற்காக கொடைக்கானலில் ஒரு வானிலை ஆய்வகம் அமைக்க முடிவு செய்தார்கள்.சென்னையில் இருந்து மிக நுட்பமான விலைமதிப்பற்ற கண்ணாடி லென்ஸ்களும் அறிவியல் கருவிகளும் வந்தன.ஒரு சின்ன சறுக்கல் ஏற்பட்டால் கூட பல லட்சம் மதிப்புள்ள கருவி நசுங்கி விடும்.ஆனால் சுமார் ஆயிரம் சுமைகளாக பிரிக்கப்பட்ட அந்த கருவிகளை இந்த தொழிலாளர்கள் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் மலை உச்சிக்கு கொண்டு சேர்த்தார்கள்.அதன் விளைவாகத்தான் 1909 இல் உலக புகழ்பெற்ற எவர்ஷெட் விளைவு இங்கே கண்டுபிடிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் மறைவிடமான மூஞ்சிக்கல், சாலை வந்தபின் அவர்களின் தொழில் அழிவு, 1983 தெர்மாமீட்டர் தொழிற்சாலையின் பாதரச மாசு மற்றும் 2001 போராட்டம்.
மூஞ்சிக்கல் மறைக்கப்பட்ட தொழிலாளர்களின் உலகம் இவ்வளவு உழைத்த அந்த மக்கள் எங்கே தங்கினார்கள் தெரியுமா?வெள்ளைக்காரர்கள் தங்கியிருந்த ஏரிக்கரை பகுதியில் அவர்களுக்கு இடமில்லை.ஏரிக்கு அந்தப் பக்கம் மலைச்சரிவின் மறைவில் அவர்களுக்காக ஒரு தனி உலகம் உருவானது.அதன் பெயர் மூஞ்சிக்கல்.1914 இல் மலைக்கு சாலை வந்தது.கார்கள் வர தொடங்கின.அது நகரத்திற்கு வளர்ச்சியை கொடுத்தது.ஆனால் இரவு பகலாக சுமை தூக்கிய ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் பறித்தது.
காலம் மாறியது.சுமை தூக்கியவர்களின் அடுத்த தலைமுறை விவசாயிகளாகவும் தொழிற்சாலை தொழிலாளர்களாகவும் மாறினார்கள்.1983 இல் கொடைக்கானலில் ஒரு தெர்மாமீட்டர் தொழிற்சாலை வந்தது.என் மகன் கம்பெனியில் வேலை செய்கிறான் என்று தாய்மார்கள் பெருமை பட்டார்கள்.ஆனால் அந்த இருந்த பாதரசம் அந்த மண்ணையும் மக்களின் ரத்தத்தையும் விஷமாக்கிக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியாது.2001 ஆம் ஆண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதரச கழிவுகள் பற்றிய பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்தது.அதற்கு பிறகு மக்கள் அமைதியாக இருக்கவில்லை.தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.தொழிலாளர்களின் உடல்நலம் குறித்த கேள்விகள் எழுந்தன.மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்கினார்கள்.தொடர்ச்சியான போராட்டங்களுக்கும் அழுத்தங்களுக்கும் பிறகு 2001 ஆம் ஆண்டு அந்த தொழிற்சாலை மூடப்பட்டது.தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது.ஆனால் அதன் பாதிப்புகளை சுமந்த தலைமுறைகளின் கதை மட்டும் இன்னும் முடிவடையவில்லை.
மதிகெட்டான் சோலை, குணா குகை போன்ற கொடைக்கானலின் மர்மங்களுடன், வரலாறு சாதாரண மனிதர்களின் வியர்வையில் எழுதப்படுவதை முடிவுரையாக வலியுறுத்துகிறது.
கொடைக்கானலின் மர்மமான காடுகள் இன்னொரு பக்கம் கொடைக்கானலின் காடுகள் பல மர்மங்களை உள்ளே வைத்திருந்தன.உள்ளே சென்றால் திசை தெரியாமல் தடுமாற வைக்கும் மதிகெட்டான் சோலை.உண்மையில் அங்கே பேயும் இல்லை மயக்கும் செடியும் இல்லை.சூரிய ஒளியே நுழையாத அடர்த்தியும் ஒரே மாதிரியான நிலப்பரப்பும் தான் மனிதர்களை குழப்புகிறது.டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்டு கமல்ஹாசன் படத்திற்கு பிறகு குணா குகையாக மாறிய மரண பள்ளம்.2006 இல் அந்த 80 அடி ஆழ குழியில் விழுந்த நண்பனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மஞ்சும்மல் பாய்ஸ் நிஜ கதை வரை கொடைக்கானல் பல திருப்பங்களை கண்டது.மறக்கட்ட உண்மையான நாயகர்கள் இன்று ஒரு சுற்றுலா பயணி கொடைக்கானலுக்கு செல்லும் போது 1821 இல் ஆங்கிலேயர் கண்டுபிடித்த நகரம் என்ற பலகையை பார்க்கிறார்.ஆனால் இன்று அங்கே டாக்ஸி ஓட்டும் பல இளைஞர்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் தான் அந்த நகரத்தின் ஒவ்வொரு கல்லையும் தங்கள் தலையில் சுமந்து வந்தவர்கள்.வரலாறு என்பது எப்போதும் அரசர்களின் பெயர்களிலும் அதிகாரிகளின் சிலைகளிலும் மட்டும் எழுதப்படுவதில்லை.சில நேரங்களில் 23 கிலோ எடையுள்ள பெட்டியை தலையில் சுமந்து கொண்டு இருட்டான காட்டுக்குள் சந்தோஷம் என்று பாடிக்கொண்டே நடந்த சாதாரண மனிதர்களின் வியர்வையிலும் தான் எழுதப்படுகிறது.அடுத்த முறை நீங்கள் கொடைக்கானல் ஏரியை சுற்றி வரும்போது ஒரு நிமிடம் நின்று அதன் கிழக்கு பக்கமாக பாருங்கள்.அங்கே தான் இந்த நகரத்தை உருவாக்கிய உண்மையான நாயகர்களின் கதை உறங்கிக் கொண்டிருக்கிறது.